தனியுரிமைக் கொள்கை

ICICI வங்கி (வரையறுக்கப்பட்ட) சிறிலங்கா கிளை (ICICI வங்கி, நாம், எமது, நமக்கு) கடப்பாட்டின் முக்கியமான பகுதி எமது வாடிக்கையாளர்களுக்கு (வாடிக்கையாளர், நீர் அல்லது உங்களது) உன்னதமான சேவையுடன் உங்களது தனியுரிமைக் காப்புரிமையை மதிப்பதுமாகும். உங்களது தகவல்களைக் காப்பதே எமது உன்னத சேவையை வழங்கும் ஆற்றலுக்கான மூலாதாரமான போதும் வாடிக்கையாளரின் நம்பிக்கையே என்று மிகமுக்கியமானதாகும். உங்களது தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை மேலதுவரை உறுதி செய்வதும் (வாடிக்கையாளர் என்ற ரீதியில் உங்களை உங்களுடன் தொடர்பான தகவல்) இரகசியமாக வைக்கப்படுவது எமக்கு முதன்மையானதொரு முன்னுரிமையாகும்.

ICICI வங்கி உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதித்தகவல்களின் துல்லியம், நம்பகத்தன்மை, மற்றும் பாதுகாப்பைப் பராமரிக்க கடமைப்பட்டுள்ளது. இக்கடமைப்பாட்டின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர் தகவல் பயன்பாடு தொடர்பான எமது நடவடிக்கைகளைக் கையாள எட்டு தனியுரிமைக் கொள்கைகளை நிறுவியுள்ளது.

எட்டு தனியுரிமைக் கொள்கைகள்

1. பொறுப்பு :

வங்கி தமது கட்டுப்பாட்டில் இருக்கும் வாடிக்கையாளர் தொடர்பான தகவல்களை நடைமுறைப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பானது. எந்தவிதமான கேள்விகளிருப்பின்; அவற்றை இந்தத் தனியுரிமைக் கொள்கைக் கூற்றின் முடிவில் இருக்கும் விலாசத்திற்கு அனுப்பவும்.

 

2. தேவைகளை அடையாளம் காணல் : நடைமுறையில் சாத்தியப்படுமளவில், தனிப்பட்ட விபரங்கள் சேகரிக்கப்படும் போது அல்லது தகவல் சேகரிக்கப்படும் முன்னதாக நாம் அவற்றை அடையாளம் கண்டு அவை எக்காரணத்திற்காக சேகரிக்கப்படுகின்றன என்பதை ஆவணப்படுத்துவோம். நாம் கேட்கும் தகவல்கள் எவ்விதமான பொருட்கள் அல்லது சேவை(கள்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதோ அதனைப் பொறுத்திருக்கும்.

அதிகளவிலான தகவல்கள் நேரடியாக உங்களிடமிருந்து நீங்கள் நிதிசார் பொருட்கள் அல்லது சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பெறப்படுகின்றன. மேலும் நாம் கடன் மத்திய நிலையம் தகவல்களையும், நீங்கள் எமக்கு வழங்கிய வருமான மூலங்கள், தனிப்பட்ட மேற்கோள்களிலிருந்தும்; தேவைப்படுத்தலாம். மேலதிக தகவல்களை மூன்றாம் நபரிடமிருந்து பெறுவது, ஏனைய விடயங்களிலும் பார்க்க, உங்களது தகுதியை எமது பொருட்கள் சேவைகளைப் பெறுதலை, மதிப்பிட உதவும். நாம் வாடிக்கையாளர் எம்முடன் தொடர்பினை ஏற்படுத்தினாலன்றி தேவையற்ற வாடிக்கையாளர் தகவல்களை, மின்னஞ்சல் மூலமோ தொலைபேசி மூலமோ பெறமாட்டோம். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வாடிக்கையாளர்கள் முறையற்ற விதமாக மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் எம்மிடமிருந்து வேண்டப்பட்டால் வாடிக்கையாளர்கள் அவன்/அவள் தொடர்பான முகாமையாளருடன் உடனடியாக தொடர்பு கொண்டால், எம்மால் உடனடியாக அவ்வாறான முறையற்ற கேள்விகளைக் கேட்பதை தடுக்க முடியும். இவ்வாறாக சேகரிக்கப்படும் தகவல்களை நாம் எத்தேவைக்காக அது சேகரிக்கப்பட்;டதோ அதற்கேற்ப அதற்கு ஏற்புடைத்தான சட்டத்திற்கமையவும்; பிரதானமாக வாடிக்கையாளர்களுக்கு எமது பொருட்களையும் சேவைகளையும் தனிப்பயனாக்கி வழங்கப் பயன்படுத்துவோம். எந்த சந்தர்ப்பத்திலும் நாம் வாடிக்கையாளர்களை அவர்களது தனிப்பட்ட அடையாள இலக்கத்தையோ (PINs) அல்லது நேரடி வங்கிச் சேவைக்குரிய கடவுச்சொல்லையோ (Password) வெளிப்படுத்துமாறு கேட்கமாட்டோம்.

3. வாடிக்கையாளர்களின் தகவல்களைக் கையாளுதல்.
வாடிக்கையாளர்களின் தகவல்களைப் பாதுகாப்பதில் நாம் கண்டிப்பான இரகசியத் தன்மையான நியமங்களை வெளிப்படுத்தியுள்ளோம்.

4. வாடிக்கையாளர் தகவல்களை வெளிப்படுத்தல்.
சாதாரண வங்கி நடவடிக்கையின் போது உங்களுக்கு சேவை செய்வதற்காக அல்லது ICICI வங்கியினை அல்லது அதனது தொடர்பாளர்களின் அக்கறையைப் பாதுகாக்க நடைமுறையிலுள்ள சட்டத்திற்கமைய அல்லது அதன் தொடர்பாக அன்றி நாம் வெளி நபர்களுக்கு வாடிக்கையாளர் தகவல்களை வெளிப்படுத்தமாட்டோம்.

5. பிறதித்தவர்களின் இணக்கம்

வங்கி நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் நிமித்தம், வங்கியுடன் தொடர்பில் ஈடுபடும் வாடிக்கையாளர் தகவல்களை அறிந்த பிறதிறத்தவர்களும் வங்கியின் இரகசியத்தகவல் தேடும் கோட்பாட்டின்படி ஒழுகவேண்டும்.

6. துல்லியம் (Accuracy):

நாம் உங்களுக்கு சேவை செய்ய வாடிக்கையாளர் தகவல் சரியானதாகவும், முழுமையானதாகவவும், நவீனமுறையில் இருக்க வேண்டியதும் அவசியம்.

இதனை நேர்த்தியாக வைப்பதற்கு உங்களது தனிப்பட்ட தகவல்களை மற்றும் விபரங்களை எமக்கு அறிவிக்க வேண்டும் எனக் கோரப்படுகிறீர்கள். உங்களது தகவல்கள் ஏதாவது தவறாக இருப்பின் அதனை எமக்கு அறிவித்தால் நாம் நியாயமான செயல்முறையில் எவ்வளவு துரிதமாக இயலுமோ அவற்றை திருத்தியமைப்போம்.

7. வாடிக்கையாளரின் தகவல்களைப் பாதுகாத்தல் :
நாம் உங்களது பிரத்தியேக தனிப்பட்ட தகவல்களை தகுந்த பாதுகாவல் முறைகளால் பாதுகாப்போம். நாம் நமது வேலையாட்கள் அணுகாவண்ணம்;, தீயால் தாக்கப்படாத பூட்டி வைத்த அலுமாரிகளிலும், பலவிதமான மின்னியக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் அளவிடைகளான கடவுச் சொல்கள், தனிப்பட்ட அடையாள இலக்கங்கள், தகவல் தரிக்கும் கைமுறைகள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கை முறைகளின் மூலம் தங்களது தகவல் கோவைகளையும் தரவு மையங்களையும் பாதுகாப்போம்.

நாம் இணையம் மூலம் பரவும் தரவு மறையீடாக்கம் அல்லது நெரிசலில் வணிகரீதியாக கிடைக்கும; 128-bit SSL மறை குறியாக்கத்தை இணையதளத்தில் பயன்படுத்துகின்றோம். இது தற்போது வணிகரீதியாக கிடைக்கும் குறியாக்கத் தொழிநுட்பத்தில் உயர்ந்த தரம் உடையதென்றும் Sri Lanka வில் இருக்கும் வங்கிகளினாலும் பொதுவாக உலகளவில் இருக்கும் நிதி நிறுவனங்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை.

உங்களது செல்லுபடியாகும் பயருநர் பெயரும் உங்களை மட்டும் அடையாளம் காணும் கடவுச் சொல்லும் இந்த இணையதளத்தை அணுக உதவும். இது இந்த பாதுகாப்பு வலயத்தினுள் அனுமதியளிக்கப்பட்ட பாவனையாளர்களின் செய்திகள் மட்டும் செல்வதை உறுதியளிக்கும்;.

8. வாடிக்கையாளர் அக்கறை
தனியுரிமை நம்பகத்தன்மை பற்றி அல்லது எவ்வாறு தகவல் ஒன்று கையாளப்பட்டதென ஏதாவது கேள்விகள் அக்கறைகள் பிரச்சினைகள் இருப்பின், தயவு செய்து (Anti Money Laundering Officer இன் கவனத்திற்கு) கீழ்க்காணும் விலாசத்திற்கு அழைப்பு / மின்னஞ்சல் செய்யலாம்.

விலாசம: ICICI வங்கி லிமிட்டட்
ஸ்ரீலங்கா கிளை
58இ தர்மபால மாவத்தை
கொழும்பு – 7
ஸ்ரீலங்கா.
தொலைபேசி : 0094-11-4242400
தொலைபிரதி : 0094-11-471961

தனியுரிமை – Online – பொது

நாம் ‘Cookies’ என்றழைக்கப்படும் சிறிய கோவைகளை உங்களது இணையதள அனுபவத்தை மேம்படுத்த பயன்படுத்தலாம். நீங்கள் ஒரு தளத்தை பாவித்திருப்பின், எந்த தளத்தை உடனடியாக முன் விஜயம் செய்தீர்கள், என கண்காணித்து உங்களைப் பற்றிய அந்தத் தகவலை சேகரிக்க Cookiesஇனால் முடியும். ஆனால் உங்களது கணணியில் இருக்கும் நீங்கள் பற்றிய தனிப்பட்ட தகவலையோ ஏற்கனவே கணணியில் இருக்கும் தரவுகளையோ பயன்படுத்த முடியாது. குக்கிகளை பயன்படுத்துவது தற்போது பல இணையதளங்களுக்கு தரமான இயக்க செயன்முறையாவதுடன் உங்களது உலாவியை எப்போது குக்கியொன்று பெறப்படுகின்றது என்பதை அறிவிக்கும்படி செயல்படுத்த முடியும்.

ICICI வங்கி வாடிக்கையாளர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கு எல்லாவிதமான தேவையானதும் நியாயமானதுமான எல்லா நடவெடிக்கைகளையும் வாடிக்கையாளரின் தகவல் பற்றி நம்பகத்தன்மையை உலகலாவிய ரீதியில் பரிவர்த்தனை செய்வதில் வாடிக்கையாளரின் ஒப்பந்தத்திற்கேற்ப தகவல் மறைவெளியீடு செய்யும்பட்சத்தில் பொறுப்பாளியாகாது.

ICICI வங்கி [128-bit குறியாக்கத்தை] அணுகப்படும் பக்கங்களுக்கு தகவல் பரிவர்த்தனை செய்ய பாவனை செய்கின்றது. வாடிக்கையாளரால் வழங்கப்படும் தகவல் இந்த முறைமையினால் (system) பரிவர்த்தனை செய்யப்பட்டால் வாடிக்கையாளரின் தகவலுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கப்படுவதை உறுதிசெய்வதாக செய்தி ஒன்றைக் காண்பிக்கும்

நீங்கள் தகவல் பற்றிய பாதுகாப்பை உறுதிசெய்ய ICICI வங்கியுடன் ஒத்துழைக்க வேண்டுமென்பதுடன் உதாரணத்துக்கு:- நீங்கள் ஒரு கடவுச்சொல்லைக் கவனமாக அதிகாரம் அளிக்கப்படாத மூன்றாம் நபர் ஒருவர் அணுகமுடியாத அளவில் தெரிவு செய்யவேண்டும். நீங்கள் உங்கள் கடவுச்சொல்லை எவருக்கும் வெளிப்படுத்தவும் கூடாது. அத்துடன் மூன்றாம் நபரொருவர் அணுகும் விதமாக வைக்கவோ, எழுத்திலோ வேறு வித பதிவாகவோ வைத்திருக்கக்கூடாது.
வாடிக்கையாளர் வேறு ஒரு நபருக்கு எந்தவிதத்திலும் ICICI வங்கியிடமிருந்து இணையதள சேவையை கொள்வதற்கான ரீதியில் வழங்கப்பட்ட பிரத்தியேக முறையான தகவலை வெளிப்படுத்தக் கூடாது. இந்தக் கடப்பாட்டை பின்பற்ற தவறுவது இங்குள்ள நிபந்தனைகளை மீறியதாகக் கருதப்பட்டு ICICI வங்கி தொடர்பான சேவையை முடிவுறுத்த உரித்தாக்கும்.

உங்களது தனியுரிமை ஊடுருவப்பட்டுள்ளதாக அல்லது உங்களது கணக்கு(கள்) உத்தரவாதமளிக்கப்படாத நபர்களால் அணுகப்பட்டதாக அறியின் உங்களது கடவுச் சொல் உடனடியாக மாற்றி மேற்காணும் இலக்கத்தை அழைத்து எம்முடன் உடனடியாக தொடர்பு கொள்ளவும். உங்களது அனுமதியின்றி அதிகாரமளிக்கப்படாத நபர்களினால் ஏதாவது பரிமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என சரிபார்த்துக் கொள்ளவும். ஏதாவது அனுமதியளிக்கப்படாத அல்லது வழமைக்கு மாறான பரிமாற்றங்கள் நிகழ்ந்திருப்பின் தயவுசெய்து உடனடியாக எமக்கு அறிவிக்கவும்.
உங்களது கணக்குக் கூற்றுகளை கிரமமாக சரிபார்த்து அதாவது தவறுகளிருப்பின் உடனடியாக அறிவிக்கவும். (promptly)

வங்கிக் கணக்குகள்:

உங்களது ஏதாவது ஒரு நாட்காட்டி மாதாந்த வங்கிக் கணக்கிலோ, பணவைப்பு உறுதியாக்கல் மதிப்பறிக்கையிலோ வேறு ஏதாவது உங்களது கணக்குகள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் கூற்றிலோ அதாவது தரவு (நவெசல) அல்லது தவிர்ப்பு பற்று ஆட்சேபணை இருப்பின் நீங்கள் அந்த அவ்வாறான அறிக்கை கிடைத்த ஏழு(7) நாட்களினுள் நேரடியாகவோ மின்னஞ்சல் மூலம் அறியத்தரவேண்டும். இவ்வாறு செய்யத்தவறுதல் குறித்த கணக்குக் கூற்றையும் அந்த கணக்குக் கூற்று உண்மைத்துவத்தையும் ஏற்பதாக கணிக்கப்படும்.

பிற இணையதளங்கள்.

ICICI வங்கியின் இணையதளம்(கள்) இந்த தனியுரிமை கோட்பாட்டினால் ஆளப்படாத மூன்றாம் நபர் தளங்களுடன் இணைப்புகளைக் கொண்டிருக்கலாம். நாம் பொருத்தமான தனியுரிமை கோட்பாடுடைய தளங்களுடன் மட்டும் இணைப்பு வைக்க முயற்சிக்கும் போதும் ICICI வங்கி இணையதளத்திலிருந்து விலகியதும் எமது தனியுரிமை கோட்பாடு ஏற்புடைத்தாகாது. மேலும் 3ம் நபர் இணையதளங்களது தனியுரிமை செயற்பாடுகளுக்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல. எனவே நாம் நீங்கள் அந்த தளங்களது தனியுரிமை கூற்றுக்களையும், கோட்பாடுகளையும் ஆராய்ந்து எப்படி உங்களது தகவல் சேகரிக்கப்படலாம், பாவிக்கப்படலாம், பகிரப்படலாம். வெளியிடப்படலாம் என்பதனைக் கற்க வேண்டும்.