ICICI இணையதள வங்கிச் சேவையிலுள்ள பாதுகாப்புத் தன்மை

ICICI இணையதள வங்கிச் சேவை ஏராளமான பாதுகாப்பு நடைமுறைகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் தரவுக் குறியீடு இடுதலில் இருந்து பாதுகாப்பு கடவைகள் நிறுவுதல் வரையில் விஸ்தாரிக்கப்பட்டுள்ளது. ICICI இணையதள வங்கி அதியுயர் வர்த்தக ரீதியில் பெறக்கூடிய (128 BIT) SSL பாதுகாப்புத் தரவு க்குறியீடுகளைக் கொண்டுள்ளதன் மூலம் பாதுகாப்பான தகவல் பரி மாற்றத்தினை வாடிக்கையாளருக்கும் icicibank.com இணைய தளத்திற்கும் இடையில் மூன்றாம் தரப்பு நபர்;களின் உள்ளீடு இன்றி நிறைவேற்றிக் கொள்ள முடிகின்றது. உ லகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற்ற SSL தொழிநுட்பமானது இணைய தளங்களில் வாடிக்கையாளர்;களுக்கும் இணையதள சேவை வழங்கும் கணணிக்கும் இடையில் பாதுகாப்பான தரவுக் குறியீடு இடுதல்களுடன் அடையாள நிரூபண வசதிகளுடன் கூடிய பாதுகாப்புத்தன்மை கொண்டுள்ளது.

 

இங்குள்;ள பாதுகாப்புக் கடவை (அனுமதியின்றிய வங்கியின் கணணிக் கட்டமைப்புக்குள் நுழைவோரை தடுக்கும் இலத்;திரனியல் வேலி) உங்கள் குறியீட்டுச் சொல் (கடவை சொல்) வங்கிக் கணக்குத் தரவுகள் மற்றும் ஏனைய முக்கிய தகவல்களை இணையதள பரிமாற்றத்தின் போது பாதுகாப்புத் தன்மையைப் பேணும் பொருட்டு (128-Bit) வர்த்தக ரீதியான SSL தொழிநுட்பத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.

 

பாதுகாப்பு நடைமுறைகயாக உள்ளே நுழைந்த பயருநர்; 10நிமிடங்களுக்கு எவ்வித இணையதள நடவடிக்கையிலும்; ஈடுபடாவிடின் அவர் வெளியேற்றப்படுவர்.

பயருநர் பங்களிப்பு

பயருநர்; இணைய தளத்திற்கு தகவல்களை வழங்கும்போது அல்லது கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும்போது மேற்கண்ட தொழிநுட்பமானது அதிக பாதுகாப்பை வழங்குகின்றது.

 

பாதுகாப்பான கொடுக்கல் வாங்கல்களை இணைய தளத்தில் ஈடுபடும் பொருட்டு வங்கி இணைய தள சேவை பாவனையாளர்;;களுக்கு ICICI வங்கி பின்வரும் அறிவித்தல்களை வழங்குகின்றது.

தனிப்பட்ட மற்றும் ஏனைய தகவல் பரிமாற்றத்தின் போது:

  • கணக்கு மூடப்பட்டு விடும் என்ற அறிவுறுத்தல்களுடன் ICICI வங்கி சா ர்;பாக உங்களை வந்தடையும் மின்னஞ்சல் குறுந்தகவல் (SMS) தொலைபேசி அழைப்புகள் என்பவற்றிற்கு நீங்கள் தகவல்களை வழங்காதீ ர்;கள்.
  • தனிப்பட்ட கணக்குத் தகவல்களை மின்னஞ்சல் (Email) மூலம் அனுப்புவதைத் தவிர்;க்கவும். அவ்வறு தகவல்களை வழங்கின் இணையதள முகவரி இணையதள உரிமையாளர்;கள் பற்றிய தகவல்களை சரிபார்;த்துக் கொள்ளவும். இணையதள முகவரியை வழங்கும் விலாசப்பெட்டி (Add Bar)யில் உள்ள முகவரி சரியானதாவென பாவிப்பதன் முன் சரிபார்க்கவும்.

பல்வேறு இணைய தளங்களில் பொருட்கொள்வனவில் ஈடுபடும் போது உள்ள பாதுகாப்புத் தன்மைகள;

வெவ்வேறு இணையதளங்கள் வாடிக்கையாளர்;கள் இணையதள பொருட் கொள்வனவில் ஈடுபடும் பணத்தை செலுத்தும் பொருட்டாக அவர்களின் இணையதள வங்கி பயருநர்; பெயர் மற்றும் கடவுச்சொல் வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த இணையதளங்கள் பல்வேறுபட்ட தரவுக்குறியீடுதல்களையும் பாதுகாப்பு நடைமுறைகளையும் இணையதள கொடுக்கல் வாங்கல்களில் கொண்டுள்ளன.

 

இணையதள பொருட்கொள்வனவின் போது பணப்பரிமாற்றுதலில் ஈடுபடுகையில் ICICI வங்கி பின்வரும் பாதுகாப்பு நடைமுறைகளை பிரேரிக்கிறது.

  • இணையதளங்கள் மூலம் தகவல்களை வழங்கின் இணையதள முகவரி, இணையதள உரிமையாளர்கள் பற்றிய தகவல்களைச் சரிபார்த்துக்கொள்ள வும். சந்தேகத்துக்கு ஏற்ற இணையதளங்களாக இருப்பின் அவற்றினை விட்டு விலகவும். அவற்றிலுள்ள எவ்வித அறிவுறுத்தல்களையும் பின்பற்ற வேண்டும்.

பொருள் விற்பனையில் ஈடுபடும் இணையதளங்கள் பெயர், வாடிக்கையாளரின் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, பொருள் விநியோகத்திற்காக வேண்டி நிற்கும். ஆயினும் இக்கொடுக்கல் வாங்கல்களில் சம்பந்தமற்ற வேறு ஏதாவது தகவல்களை வேண்டிநிற்பின் தயவுசெய்து அவற்றினை வழங்கவேண்டாம்.

  • நீங்கள் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் இணையதள முகவரிகள், கொடுக்கல் வாங்கல் அறிவித்தல் இலக்கங்கள், இணையதள உரிமையாளர்கள் பற்றிய தகவல்களைத் தவறாது பதிவு செய்து வைத்திருங்கள்.

பயருநர் பெயர் கடவுச்சொல் என்பவற்றின் மூலமுள்ள இணையதள வங்கிச்சேவையிலுள்ள பாதுகாப்பு.

கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும்போது இணையதள வங்கிச்சேவையின் அதியுயர் பாதுகாப்பைக் கருதி பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுதல் மிகவும் உசிதமானது.

  • முதல் உள்நுழைவின் (Log in) போது கடவுச்சொல்லை மாற்றுங்கள். அதன் பின் மாதம் ஒரு முறையாவது கடவுச்சொல்லை மாற்றுதலை வழக்கமாகக்கொள்ளவும்.
  • பயருநராக உள்நுழைவதற்குக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கும் வெவ்வேறு கடவுச்சொற்களை பாவிப்பது இணையதள கொடுக்கல் வாங்கல்களில் மேலதிக பாதுகாப்பை வழங்கும்.
  • உங்கள் கடவுச்சொற்களின் சிக்கல் தன்மையை அதிகரிப்பதற்கு எழுத்துகள் இலக்கங்கள் விஷேட குறிகள் [!, @, #, $, %, ^, &, *, (, ) ] போன்றவற்றை கலந்து வழங்கும். உங்கள் கடவுச்சொல் மற்றவர்களால் ஊகிப்பதற்கு இலகுவானதாக அல்லாமல் சிக்கல் நிறைந்ததாக காணப்படவேண்டும். இது குறியீட்டுச்சொற்களின் இணையதள பாதுகாப்பை அதிகரிக்கும்.
  • நீங்கள் எவ் இணையதளத்திலாவது கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் போது பாவிக்கும் கணணி பொதுப்பாவனையில் உள்ள கணணி அல்லது உங்கள் சொந்தமல்லாத கணணியாக இருப்பின் தயவு செய்து கடவுச்சொல்லை உங்கள் வேலைத்தளத்தில் அல்லது வீட்டில் மாற்றவும். பொதுப்பாவனையில் உள்ள கணணியில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும்போது கொடுக்கல் வாங்கல் கடவுச்சொல் பாவனையின் பின் வீட்டில் அல்லது வேலைத்தளத்தில் மாற்றுதல் மிகவும் முக்கியம்.
  • PIN இலக்கங்களைக் கொண்ட மின்னஞ்சல் இருப்பின் அவற்றை ஞாபகத்தில் வைக்கவும். அதன் பின் அதனை அழித்துவிடவும். அவ்வாறு அல்லாவிடின் PIN இலக்கத்தை மாற்று வசதிகள் இருப்பின் அதை மேற்கொள்ளவும். உங்கள் Pin இலக்கத்தை ஒருபோதும் எவருக்கும் வெளிப்படுத்தவோ மற்றவர்கள் உபயோகிக்க வாய்ப்பாக பொதுவான ஏதேனும் ஒன்றிலோ எழுதிவைத்தல் ஆகாது.
  • தயவு செய்து உங்கள் ATM கடனட்டைகள் போன்றவற்றை எவருக்கும் வழங்குதலாகாது. அவ்வாறு வழங்கின் அவற்றை அவர்கள் பிரயோகிக்க முடியும்.

இணையதள பாதுகாப்பிற்கான பொதுவான தகவல்

  • தெரிந்த நபர்களிடமிருந்து கிடைக்கும் மின்னஞ்சல்களை மட்டும் பார்வையிடவும். அதிலும் இணைப்பிதல் ஆவணங்களைத் தர இறக்கம் செய்யும் பொழுது மிகக்கவனமாக இருக்கவும். ஏனெனில் அவற்றில் வைரஸ் இருக்கலாம்.
  • நீங்கள் பாவனையில் ஈடுபடும் இணையதள முகவரியினை உன்னிப்பாக அவதானிக்கவும். இது உங்கள் சுய தகவல்களை வழங்கும் ஒவ்வொரு தருணத்தின் போதும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.
  • உங்களைப் பற்றிய முக்கிய தகவல்களை இணையதளங்களில் வழங்கும் போது இணையதள பக்கத்தின் கீழ் வலப்புறம் பூட்டு (lock) அடையாளம் இருக்கின்றதா? என பரிசீலித்துப் பார்க்கவும். இது பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தைக் குறிக்கும்.
  • உங்கள் கணணிகளில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் பாவனையில் உள்ளதாவென பரிசீலிக்கவும். வைரஸ் எதிர்;ப்பு மென்பொருட்கள் அடிக்கடி மீள் தரவுப்படுத்தலானது புதிய வைரஸ்களிலிருந்து பாதுகாப்பை வழங்குகின்றது. இவ்வாறு மீள் தரவுப்படுத்துதல் இலவசமாக சேவை வழங்குநர்களினால் வழங்கப்படுகின்றது.
  • நீங்கள் இணையதளத்தை கேபிள்கள் /DSL Modam ஊடாக பாவிப்பவராக இருப்பின் உங்களுக்கென தனியான பாதுகாப்புக் கடவையை அமைப்பதன் மூலம் அனுமதியற்ற பாவனையைத் தவிர்க்க முடியும்.
  • கணணிகள் பாவனையில் இல்லாத போது இணையதளப் பிணைப்பை நிறுத்தவும். அல்லாவிடின் கணணியை மூடிவிடவும்.
  • கொடுக்கல் வாங்கல் உறுதிப்பத்திரங்கள் கடனட்டைகள் மற்றும் வங்கிக்கூற்றுக்கள் கிடைத்தவுடன் அவற்றில் உங்கள் கொடுக்கல் வாங்கல்கள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளனவா என சரிபார்க்கவும். ஏதேனும் சந்தேகமிருப்பின் உடனடியாக வங்கிக்கு அறிவிக்கவும்.
  • உங்கள் கடனட்டைகள் மற்றும் வங்கிக்கூற்றுக்கள் கிடைத்தவுடன் அவற்றிலுள்ள நீங்கள் செலவு செய்யாத ஏதாவது செலவீனங்கள் உள்ளனவாவென சரிபார்க்கவும். ஏதாவது சந்தேகத்திற்கிடமான பாவனைகள் இருப்பின் உடனடியாக கடனட்டையை செல்லுபடியற்றதாக்குவதன் மூலம் வீண்பாவனையைத் தடுக்கலாம்.